Sunday, 29 October 2023

மரத்தாத்தா




ÁÃò¾¡ò¾¡.

                                                þá. º¢ýÉШÃ.

     «Æ¸¡É «½¢ø «ó¾ ÁÃò¾¢ý Á£Ð Å¢¨Ç¡Ê즸¡ñÊÕó¾Ð.

«½¢§Ä.. «½¢§Ä..” ¡§Ã¡ ÜôÀ¢Îõ ÌÃø §¸ðΠŢ¨Ç¡ÎŨ¾ ¿¢Úò¾¢î ÍüÚõ ÓüÚõ À¡÷ò¾Ð «½¢ø.

«½¢ø.. ¿¡ý¾¡ý ÁÃõ §Àº§Èý..”

ÁÃÁ¡..! ¿£í¸Ùõ §ÀÍÅ£í¸Ç¡... ¦º¡øÖí¸.. ¦º¡øÖí¸.. ±ýÉ ¦ºö¾¢«½¢ø ¾¢¨¸ôÒ¼ý §¸ð¼Ð.

õ..ÁÃõ¾¡ý §Àº§Èý, ¿¡ý §ÀºÈÐ.. ¯í¸ÙìÌ ÁðΧÁ §¸ðÌõ.. «½¢ø ¾õÀ¢, ¿¡¨Ç¢ĢÕóÐ ¿£í¸û ±ýÁ£Ð ²È¢ þÈí¸¢ Å¢¨Ç¡¼ ÓÊ¡Ð..” ±ýÚ §À ¿¢Úò¾¢ÂÐ ÁÃõ.

²ý ÓÊ¡Ð?! ¿£í¸ þí¸¾¡§É þÕôÀ£í¸, À¢ÈÌ ¿¡ý ²È¢ Å¢¨Ç¡¼ ÓÊ¡Ð..?!” «½¢ø ´ýÚõ Å¢Çí¸¡Áø §¸ð¼Ð.

«¾¡ÅÐ.. ¿¡¨ÇìÌ ´ýÀÐ Á½¢ìÌ ±ý¨É ´Õ ÁÉ¢¾ý ¦ÅðÊ Å¢ÎÅ¡ý.. «ôÒÈõ ±ÉìÌ þó¾ ¯ÂÃÁ¡É ¯ÕÅõ §À¡Â¢Îõ, º¢ýÉ º¢ýÉ Ðñ¼¡¦ÅðÊÎÅ¡í¸,  «¾É¡Ä ¿£í¸ Å¢¨Ç¡¼ ÓÊ¡Ð..” ÁÃõ ¦º¡øÄ¢ÂÐ.

«ôÀÊ¡!. «ó¾ ÁÉ¢¾ý ÅÃðÎõ.. ¿¡ý «Å¨Ã ¸ÊòРŢÃðÊ Å¢Î§Åý«½¢ø ¦ÅÌÇ¢ò¾ÉÁ¡¸ô §Àº¢ÂÐ.

«Ð ÓÊ¡Ð, «Åí¸øÄ¡õ Àĺ¡Ä¢í¸..¯í¸¨Ç ´§Ã «Ê墀 ¿Íì¸¢ì ¦¸¡ýÛÎÅ¡í¸.. «¾É¡Ä ¿¡ý ¦º¡øÄȨ¾ì §¸Ùí¸..” ÁÃõ §À ¿¢Úò¾¢ÂÐ.

¦º¡øÖí¸.. ¿¡ý ±ýÉ ¦ºöÂÛõ..” ÁÃò¾¢ý À¾¢Ö측¸ ¸¡ò¾¢Õó¾Ð «½¢ø.


¿¡¨Ç ÁÃò¨¾ ¦Åð¼¡Áø þÕì¸ÛõÉ¡.. «ó¾ ÁÉ¢¾É¢ý Á¨ÉŢ¢¼õ ¿£í¸û §ÀºÏõ.. «ó¾õÁ¡ ¦º¡ýÉ¡ò¾¡ý «Å÷ §¸ðÀ¡÷..”

«¦¾ôÀÊ, «ó¾õÁ¡ ¡ÕýÛ ±ÉìÌò¦¾Ã¢Â¡§¾!.” «½¢ø «ôÀ¡Å¢Â¡ö §¸ð¼Ð.

¿¡ý ¯í¸ÙìÌ «Åí¸ þÕôÀ¢¼õ ±í§¸ýÛ ¦º¡øÄ§Èý.. ¬É¡ ¿£í¸ §¿ÃÊ¡ «ó¾õÁ¡¸¢ð¼ô §ÀºÓÊ¡Ð.. §Àº¢É¡ «ùÅÇ× ±ÎÀ¼¡Ð.. «¾É¡Ä «ó¾õÁ¡ ÅÇ÷ò¾È â¨É¸¢ð¼ô §ÀÍí¸..” ±ýÈ ÁÃò¾¢Û¨¼Â §Àì¸ÅÉÁ¡¸ì §¸ðÎ즸¡ñ¼Ð «½¢ø.

â¨É ¦º¡øÄȨ¾ «ó¾õÁ §¸ð¸¨ÄýÉ¡ ±ýÉ ¦ºöÂÈÐ..” «½¢ø ºó§¾¸õ §¸ð¼Ð ÁÃò¾¢¼õ.

°£õ.. «ó¾õÁ¡×ìÌ â¨ÉìÌðÊýÉ¡ ¦¸¡û¨Ç ¬¨º.. «¾É¡Ä «Ð ±ýÉ ¦º¡ýÉ¡Öõ §¸ðÀ¡í¸..” ÁÃõ ¿õÀ¢ì¨¸äðÊÂÐ.

¬Á¡ þ¦¾øÄ¡õ ¯í¸ÙìÌ ±ôÀʦ¾Ã¢Ôõ..” «½¢ø ÁÃò¾¢¼õ §¸ûÅ¢ §¸ð¼¼Ð.

µ¦¡.. «ÐÅ¡.. ¸½Åý Á¨ÉÅ¢ «Åí¸ þÃñΧÀÕõ ±ýÛ¨¼Â ¿¢ÆÄ¢ø ¯ð¸¡÷óÐ ÀÄ ¦ºö¾¢¸û §Àºì§¸ðÎ þÕ째ý.. «ÐÄ þÐ×õ ´ýÛ.. ¿£í¸ ¯¼§É §À¡í¸.. «ó¾ô â¨É¨Âô À¡÷òÐô §ÀÍí¸..” «½¢¨Ä «ÅºÃôÀÎò¾¢ÂÐ ÁÃõ.

*****

ÁÃõ ¦º¡øÄ¢ÂÀʧ «½¢ø «ó¾ôâ¨É þÕìÌõ Å£ðÊý À¢ýÒÈõ ¦ºýÈÐ. «í§¸, ´Õ â¨É Å¢¨Ç¡Ê즸¡ñÊÕó¾Ð. «½¢ø ¦ÁøÄ¢Â ºò¾õ ±ØôÀ¢ â¨É¢ý ¸ÅÉò¨¾ì ®÷ò¾Ð. þ ÕÅÕõ À¡÷ì¸, º¢Ã¢ì¸, ÀƸ ¿ðÒ ¯ñ¼¡ÉÐ.

 

â¨É «ñ½¡, ¯í¸Ç¡Ä ´Õ ¿ý¨Á ¿¼ì¸ §ÅñÊ þÕìÌ,±ýÚ ¦ÁøÄô §À ¬ÃõÀ¢ò¾Ð «½¢ø. â¨É ¦ºö §ÅñÊÂÐ ±ýÉ ±ýÀ¨¾ ÁÃõ ¦º¡øÄ¢ì¦¸¡Îò¾ Á¡¾¢Ã¢§Â â¨É¢¼õ ±ÎòÐî ¦º¡øÄ¢ÂÐ «½¢ø.

****

â¨É À⾡ÀÁ¡É ÌÃø ±ØôÀ¢ÂÀÊ Å£ðÊÛû ѨÆó¾Ð. «½¢ø ¯ÂÃÁ¡ý þ¼ò¾¢Ä¢ÕóÐ À¡÷òÐ즸¡ñÊÕó¾Ð.

õ.. ¦ºøÄ§Á.. ±ýɼ¡.. ²ý ¼¡.. ´ÕÁ¡¾¢Ã¢Â¡ ¸ò¾§È..” â¨É¢ý À⾡ÀÁ¡ý ÌÃø §¸ðÎ째ðÎ Åó¾ «ó¾ Å£ðÎ측à «õÁ¡û â¨É¨Â ±ÎòÐ ¾ý ÁÊÁ£Ð ±ÎòÐ ¨ÅòÐ ¾¼Å¢ÂÀʧ §Àº¢É¡÷¸û.

±ÉìÌ ´ýÛõ þø§ÄõÁ¡.. ±ýÛ¨¼Â ¿ñÀÛìÌò¾¡ý ´Õ ÐýÀõ. «¨¾ ¿£í¸¾¡ý §À¡ì¸Ïõ..” «õÁ¡Å¢ý ÁÊÁ£Ð «Á÷ó¾Àʧ §Àº¢ÂÐ â¨É.

±ý ¦ºøÄ§Á.. ¦º¡øÖ¼¡. ¦º¡øÖ, ¯ý ¿½ÀÛìÌ ±ýÉ ÐýÀõ..”

¿¡¨ÇìÌ «ôÀ¡ ´Õ ÁÃò¨¾ ¦Åð¼ô§À¡È¡í¸Ç¡?

¬Á¡.. ¦Åð¼ô§À¡È¡í¸.. «Ð ¯ÉìÌò¦¾Ã¢Ô§Á.. þôÀ «ÐìÌ ±ýÉ..”

þøÄ.. «ó¾ ÁÃò¨¾ ¦Åð¼¡Á þÕì¸Ïõ.. «Ðľ¡ý ±ýÛ¨¼Â ¿ñÀý µÊ ¬Ê Å¢¨Ç¡ʸ¢ðÎ þÕ측ý..” â¨É ¦ÁøÄô §À ¬ÃõÀ¢ò¾Ð.

þøÄ¼¡ ¦ºøÄõ.. «ó¾ ÁÃò¨¾ ¦ÅðÊ Å¢òÐò¾¡ý «¾¢Ä¢ÕóÐ ¸¢¨¼ì¸È À½ò¾¢Ä¢Õóо¡ý «ì¸¡§Å¡¼ ¸øÄ¡½õ.. ¿¼ì¸ô §À¡×Ð.. þøÄ¡ðÊ ¸øÂ¡½õ ¿¼ì¸¡ÐôÀ¡.. ¯ý ¿½Àý «½¢ÖìÌ «ó¾ ÁÃõ þøÄ¡ðÊ Àì¸òÐ ÁÃòÐÄ ¦Å¨Ç¡¼ ÓÊÔõ.. ¬É¡ ¿ÁìÌ «ùÅÇ× ¦Àâ ÁÃò¨¾Å¢ð¼¡ §ÅÈ ÅÆ¢ ¦¾Ã¢ÂÄôÀ¡..

«¾É¡Ä¾¡ý «ôÀ¡ «ó¾ ÁÃò¨¾ ¦Åð¼ô§À¡È¡÷..” â¨É¢ý ÓШ¸ò ¾¼Å¢ÂÀʧ ¦º¡øÄ¢ ÓÊò¾¡÷¸û «õÁ¡.  

¬Á¡øÄ, «ì¸¡ ¸øÂ¡½òÐìÌô À½õ §ÅÏõøÄ.. þÕí¸.. þÕí¸.. Å÷§Èý..” ÁÊ¢ĢÕóР̾¢òÐ ¦ÅÇ¢§Â µÊÂÐ â¨É.

â¨É¢ý Å花¾¢÷À¡÷òÐì ¸¡ò¾¢Õó¾ «½¢ø, þÈí¸¢¸£§Æ ÅóÐ â¨É¢¼õ, ±ýÉ¡îÍ.. ¸¡Â¡, ÀÆÁ¡?.. ¦º¡øÖ..”Á¢Ìó¾ ¬÷Åòмý §¸ð¼Ð.

«õÁ¡ ¦º¡øÄ¢Â¨¾ «½¢Ä¢¼õ ¦º¡øÄ¢ÂÐ â¨É. «¨¾ì§¸ð¼ «½¢Öõ, õõ. ±ÉìÌõ ±ýÉ ¦ºöÂÈÐýÛ ¦¾Ã¢ÂÄ.. ¿õÁ þÃñÎ §ÀÕõ ÁÃò¾¡ò¾¡¸¢ð¼ §À¡§Å¡õ.. «Å÷ ²¾¡ÅÐ ÅÆ¢ ¦º¡øÖÅ¡÷«½¢ø â¨É¨Â «¨Æò¾Ð.

±ýÉÐ ÁÃò¾¡ò¾¡Å¡..” ¬îºÃ¢Âòмý §¸ð¼Ð â¨É.

¬Á¡ áÚź¡ÌÐ «ó¾ ÁÃò¾¡ò¾¡×ìÌ.. ±í¸õÁ¡ À¡ðÊ¦ÂøÄ¡õ «¾¢Ä¾¡ý þÕó¾¡í¸Ç¡õ.. ºÃ¢..ºÃ¢.. §À¡§Å¡õ Å¡..” «½¢Öõ â¨ÉÔõ ÁÃò¾¡ò¾¡¨Åô À¡÷ì¸î ¦ºýÈ¡÷¸û.

â¨É¨Âì ¸ñ¼Ðõ «ó¾ ÁÃò¾¢ý Á£¾¢Õó¾ ÀȨŸû ÀÂò¾¡ø ¸¡îÍ ãîÍ ±ýÚ ¸ò¾ ¬ÃõÀ¢ò¾É.

Å¡ «½¢ø ¾õÀ¢, ¯ý ¿ñÀý â¨É¨ÂÔõ ÜðÊðÎ Åó¾¢ðÊ¡.. Å¡í¸ ¦º¡øÖí¸ ±ýÉ¡îÍ,..” þÕŨÃÔõ ÅçÅüÈÀʧ §¸ð¼Ð.

«õÁ¡ ¦º¡ýɨ¾¦ÂøÄ¡õ ´ýÚÅ¢¼¡Áø ÁÃò¾¢¼õ ¦º¡øÄ¢É¡÷¸û.

«õÁ¡×ìÌô À½õ §ÅÏÁ¡õ.. «ÐìÌ ¿¡í¸ ±ýÉ ¦º¡øÄÈÐýÛ Òâ§Ä.. «Ð¾¡ý µÊÅ󧾡õ..” «½¢Öõ â¨ÉÔõ ´Õ §ºÃî ¦º¡ýÉ¡÷¸û.

¯ñ¨Á¾¡ý ±ý¨É ¦ÅðÊô À½õ Å¡í¸¢ «Åí¸ ¦À¡ñ§½¡¼ ¸øÂ¡½ò¨¾ ¿øÄÅ¢¾Á¡ ÓÊì¸ðÎõ.. þó¾ áÚ ÅÕºò¾¢Ä..

±ò¾¨É§Â¡ §À÷ ÀÂý «¨¼ïÍ þÕ측í¸.. ±ÉìÌ ¦Ã¡õÀ Á¸¢ú.. þôÀ×õ ±ÉìÌ ¦Ã¡õÀ Á¸¢ú¾¡ý.. ¬É¡.. ±ý¨É ¦Åð¼ÈÐìÌ ÓýÉ¡Ê.. ´Õ ÀòÐ ÁÃí¸¨Ç¡ÅÐ.. ÅîÍ ÅÇ÷ì¸î¦º¡øÖí¸.. «Ð §À¡Ðõ.. ±ÉìÌ..” ÁÃò¾¢Û¨¼Â ¸õÀ£ÃÁ¡É ÌÃø §¸ðΠŢÕð¦¼ýÚ «½¢Öõ â¨ÉÔõ «õÁ¡¨Åô À¡÷ì¸ ´§Ã µð¼õ. «í§¸ §À¡ö ¿¢ýÈ¡÷¸û.

õÁ¢Â¡ù..õÁ¢Â¡ù..” Á¸¢ú¡ö Å£ðÊÛû ¦ºýÈÐ â¨É. «¾ý À¢ý§É ÀÂó¾Àʧ «½¢Öõ ¦ºýÈÐ.

±ýɼ¡ ¦ºøÄõ.. ¯ýÛ¨¼Â ¿ñÀ¨ÉÔõ ÜðÊðÎ Åó¾¢ðÊ¡..” þÃñ¨¼Ôõ ±ÎòÐ ÁÊÁ£Ð ¨ÅòÐ즸¡ñ¼¡÷¸û «õÁ¡.

«õÁ¡.. ÁÃò¾¡ò¾¡  ÁÃò¨¾ ¦Åð¼î¦º¡øÄ¢ð¼¡÷.. ¬É¡  «ÐìÌô À¾¢Ä¡ ¿£í¸.. ´Õ ÀòÐ ÁÃí¸¨Ç¡ÅÐ ¨Åì¸Ïõ..” ¦º¡øÄ¢ ÓÊò¾Ð â¨É. «õÁ¡Å¢ý Ó¸ò¨¾§Â À¡÷òÐ즸¡ñÊÕó¾Ð «½¢ø.

ºÃ¢¼¡.. ¦ºøÄõ.. «ôÀ¡¸¢ð¼î ¦º¡øÄ¢  ÀòÐ þÕÀÐ ÁÃí¸¨Ç ¨Åì¸î ¦º¡øÄ§Èý.. ÁÃò¾¢Û¨¼Â Á¸¢¨ÁÂî ¦º¡øÄ¢¸¢ð§¼ þÕì¸Ä¡õ.. ¿¢Æø ¾ÕÐ, Á¨Æ ¾Ãì ¸¡Ã½Á¡ þÕìÌ, ÍüÚîÝÆÄô À¡Ð¸¡ìÌÐ, ţθð¼ ÁÃÁ¡ÌÐ, Å¢ÈÌ, ¿¡ü¸¡Ä¢, ¸ðÊø, þýÛõ ±ò¾¨É§Â¡ ±ò¾¨É ÀÂý¸û, §À¡ÐÁ¡.. §À¡í¸ §À¡Â¢ Å¢¨Ç¡Îí¸.. ¯ýÛ¨¼Â ¿ñÀÛìÌ §¾¡ð¼ò¾¢§Ä ±¾¡ÅÐ ¸¡ö ¸É¢¨Â측ðÎ º¡ôÀ¢¼ðÎõ..” ±ýÈ «õÁ¡Å¢ý Å¡÷ò¾§¸ðÎ þÃñÎõ ÐûÇ¢ì̾¢ò¾Àʧ µÊÂÐ ÁÃò¾¡ò¾¡Å¢¼õ ¦º¡øÄ.. 


(நன்றி: தினத் தந்தி.. வார இதழில் வெளியானது இச் சிறுகதை - )


Sunday, 8 October 2023

“என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம்”

 

      வணக்கம்.                                                                    (09.10.2023)

    இன்று உலக அஞ்சல் நாள் அக்டோபர் 9 : 

    நமது இந்திய அஞ்சல் துறை  ஒரு கட்டுரைப் போட்டி வைத்து இருந்தார்கள். அதில் கலந்து கொண்டேன். எந்த வருடம்  என்பது பற்றிய சரியான பதிவு இல்லை. அந்தக் கடிதத்தைக் கீழே பதிவிட்டுள்ளேன்

(பரிசுக்குரியதாக அமையவில்லை. )                              

---------------------------------------------------------------------------------------------------------------

            மேம்பட்ட பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரிய என் தாய் நாடே இந்தச் சுதந்திர திருநாளில் உம்மை வணங்கி மகிழ்கிறேன்.

      வடக்கில் காஷ்மீர், தெற்கில் கன்னியாகுமரி, மேற்கே வாகா, கிழக்கே வங்கம் என எல்லைகள் அமைத்து முப்புறமும் பெருங்கடல்களால் சூழப்பட்டு எழிலான தோற்றம் கொண்டு, வலிமையான பாரதமாய் இருக்கும் என் தாய் நாட்டைக் காணும்போதே இன்பம், கொள்ளை இன்பம்.

      என் தாய் நாடே, உன் குணம் கண்டு குதூகளிக்கின்றேன். எத்தனை எத்தனை மொழிகள் பேசும் மக்கள். அத்தனை பேருக்கும் ஒரே ஒரு தாயாய் அரவணைத்துச் செல்லும் உன் குணம் கண்டு கோடி கோடி இன்பம்.

      மலைகள் அருவிகள், நதிகள், குளங்கள், ஏரிகள், காடுகள், கழனிகள், பள்ளத்தாக்குகள் அத்தனையும் காலம் உமக்கு அளித்த கொடைகள். பனி மலைகளிலிருந்தும், பசுமைகொண்ட மலைத்தொடர்களிலிருந்தும் ஊற்றெடுத்து ஆறுகளாய் ஓடிவந்து, பள்ளத்தாக்கினை நாடி வந்து, மக்களின் பயன்பாட்டுக்குப் பிறகு கடலென்னும் அன்னையிடம் அடைக்கலமாகும் உன் பாங்கே பாங்கு.

     யானைகள், சிங்கங்கள், புலிகள், கரடிகள், ஏனைய எண்ணற்ற விலங்கினங்களையும், மயில்கள், குயில்கள், காடைகள், கவுதாரிகள், புறாக்கள் இன்னும் எண்ணற்ற பறவை இனங்களையும், தேக்கு, தென்னை, பாக்கு, செடிகள், கொடிகள், மூலிகைகள் என்று எண்ணற்ற தாவரங்களையும் தன்னகத்தே பெற்ற மிகப்பெரும் மலைத்தொடர்கள், காடுகள் அமைந்த சீர் மிகுந்த என் தாய்பூமியின் பெருமைகள் சொல்லி முடியாது, முடியாது.

    

மதங்கள் பல இருந்தும் ‘மதம்பிடிக்காத’ மனிதர்களையும், சாதிகள் பல இருந்தும் ‘சதியில்லா’ மனிதர்களையும் காலங்கள் தோறும் தோன்றச் செய்து இந்தியத்திரு நாட்டையும் மனித மாண்புகொண்ட மாந்தர்களாய் வாழ வைத்துக் கொண்டிருக்கும் என் தாய்த்திரு நாடே வணக்கம். நீவீர் நீடுழி வாழ்க! இந்தப் பிரபஞ்சம் உள்ளவரை  அன்புகொண்ட தாயாய் அனைவரையும் அணைத்துச்செல்!! ஏனைய நாடுகளையும் உன்னோடு நல் வழியில் அழைத்துச்செல்...

     வணக்கம் என் தாய் நாடே!

                                           அன்புப் புதல்வன்,

                                            இரா.சின்னதுரை.

Friday, 6 October 2023

அஃதே துணை

 

                                           அஃதே துணை    

                                                      

               எந்த ஒருவிசயத்துக்காகவும் மனிதன் எங்கேயும் தேடி அலைய வேண்டாம். தன்னைச் சுற்றியுள்ள இயற்கையிடமிருந்தே கற்றுக் கொள்ளலாம். இயற்கையிடம் ஒரு ஒழுங்கு இருக்கும். இந்தப் பூமிக்கு வெளிச்சம் தரக்கூடிய எல்லாமாய் இருக்கின்ற பகலவன் ஒரு ஒழுங்கினைக் கடைப்பிடிக்கிறது. சந்திரன், நட்சத்திரங்கள் அந்தந்த காலங்களுக்கேற்றவாறே தன் நிலைபிறழாது, தன் பணியினைச் செய்கிறது. அண்ட சராசரங்கள் என்கின்ற பிரபஞ்சத்திடம் ஓர் ஒழுங்கு.

              விலங்குகள் பறவைகளிடம் அற்புதமான ஒழுங்கு.  உயிரினங்களிலெல்லாம் மிக உயர்ந்த நிலையிலுள்ள மனிதன் இதையெல்லாம் தனக்குப்பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லேறு உழவன் உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவர் குறளில் ஒரு அதிகாரத்தை படைத்துள்ளார்.

              அதுமிகப் பெரிய கிராமம்.  ஒரு நண்பரை தேடிச்சென்றிருந்தேன். சுமார் 1200 வீடுகளாவது இருக்கும். அந்த ஊரின் மையத்திலிருந்த அந்த அரங்கமே கூச்சலும் குழப்பமுமாய் ஆவேசவார்த்தைகளுமாய் அதிர்ந்து கிடந்தது. ஒருவருக்கொருவர் கட்டுக்கடங்காமல் கழுத்து நரம்பு புடைக்கப் பேசிக்கொண்டும் கடுமையாக  வசைபாடிக் கொண்டுமிருந்ததால் அரங்கம் முழுவதும் எதிரொலியால் மேலும் இரைச்சல் கூடியது. அப்போது மேடை மீது ஏறி  ஒருமனிதர் ஒளி வாங்கியைப்பிடித்து,

`எனதுஅருமை மக்களே, நண்பர்களே!.. உங்கள் அனைவருக்கும் வணக்கம்` என்ற குரல் கேட்டவர்களைத் தன் வயமாக்கும் தன்மையுடையதாகவும், கேளாதவர்களும் கேட்கவிரும்பும் அளவுக்கு அந்த மனிதனின் வார்த்தை இருந்தது. அனைவரும் அமைதி கொண்டனர். அரங்கமே அமைதிகண்டது. போர் முடிந்து ஊர் திரும்பும் மன்னனாய் நெஞ்சுயர்த்தி அனைவரையும் பார்த்து ஒரு புன்முறுவல். அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்று கொண்டிருந்தவர்களும் அமர்ந்தனர். சற்றுமுன்னர் பார்த்த அடிதடியான அமைதியற்ற காட்சிகள் மாறி தற்போது உள்ள அமைதியான சூழலுக்கும் காரணம் அந்த மேடைமீது ஏறி நின்ற மனிதர்தான் காரணம் என்பைதை என்னால் உணரமுடிந்தது.

 அப்படி என்ன அந்த மனிதரிடம்.. அவர் சொல்லில்.. என்ன சிறப்பு.. வியப்பு தாளமுடியவில்லை. பக்கத்திலிருந்தவரை மெல்லத்தொட்டு இவர் என்ன ரொம்பப் பணக்காரா? இல்லை பெரிய கல்வியாளோரோ..” என்றபோது, உடனே மறுத்தார் அந்த மனிதர்.. இல்லை அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. அதையெல்லாவற்றையும்விட .. ஒழுக்கமானவர்.. ஒழுக்க சீலர்.. கடந்த நாற்பது வருடமாய்.. அவரை நாங்க பாத்துக் கொண்டு வருகிறோம்..

     என்னங்க ஒழுக்கம்னா என்னன்னு விளக்கம் தெரியுமா.. அவரை இன்னும் சீண்டினேன்..”

     அய்யா எனக்கு அவ்வளவா விளக்கம் சொல்லத்தெரியலே  ஆனா..  அவர் நல்ல மனிதர்; நல்ல மனிதர்னா அவர்கிட்ட நடுநிலமை இருக்கும், அன்பு, இனிய சொற்கள், விருந்தோம்பல் இதெல்லாம் யாரு போனாலும் அவர்கிட்ட இருக்கும்  அதனாலதான் அவருக்கு மரியாதை.

          அவரின் வார்தையின் ஆழம் உணரமுடிந்தது.

     ஒழுக்கம் என்பது ஒரு ஒழுங்கமைவு.

          ஒழுக்கம் என்பது பல செயல்களின் கூட்டுச்செய்கை. இதனைத் திருக்குறளில் பல அதிகாரங்களாக அழகுறக்கோர்க்கப்பட்டுள்ளது.

· அறன் வலியுறுத்தல். இதனை மிகவும் எளிமையாக சொல்வதென்றால் நல்ல சிந்தனைகள் / எண்ணங்கள் / நல்ல செய்கைகள் செய்வது.

·     அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

           இழுக்காறு இயன்ற(து)  அறம். (குறள்-35)

          பொறாமை, ஆசை, கோபம், பிறர் முகம் சுளிக்கும் சொல் இவற்றை நீக்கி வாழ்வதே றமாகும்.

· இல்வாழ்க்கை குடும்பம்தான் ஒரு சமுதாயத்தின் மிகச்சிறிய அலகு. இங்கேதான் நல்ல எண்ணங்ககளும் செய்கைகளும் தோன்ற வேண்டும், செய்யவேண்டும்.

     பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

          வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். (44)

           பழிக்கு அஞ்சி பொருளை நல்வழியில் சேர்த்து, செலவு செய்து பகுத்துண்டால் அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறையாது.

    · மக்கட்பேறு இல்வாழ்க்கையின் அடுத்த நிகழ்வு மக்கட்பேறு என்பதினால் இவர்களின் வழியாகத்தான் நல்ல எண்ணங்ககளும் செய்கைகளும் செயல்படுத்தவேண்டும்.

     மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்;  மற்(று) அவர்

     சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. (65)

          குழந்தைகளைத்தொட்டு வாரி அணைப்பது உடலுக்கு இன்பம். அக்குழந்தைகளின் மழலைச்சொற்களைக் கேட்பது காதுக்கு இன்பமாகும்.

· அன்புடைமை அன்புடைவராக இருத்தல்.

     அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு

          என்புதோல் போர்த்த உடம்பு. (குறள் –80)

     அன்போடு இருக்கின்ற உடலே உயிர் நிலைபெறும் உடம்பாகும்;   அன்பில்லாதவர் உடல் எலும்பைத்தோலால் மூடப்பெற்ற எலும்புக்கூடே ஆகும்.

 · விருந்தோம்பல்

           பரிந்தோம்பி பற்றாற்றோம் என்பர் விருந்தோம்பி

      வேள்வீ தலைப்படா தார்.. (குறள் –80)

     விருந்தினரை உபசரித்து அதன் பயனை அடையாதவர், பின்னர் பொருளை        வருந்தி பாதுகாத்து  அதன் பயனை அடையாமற் போய்விட்டோமோ என வருந்தும் நிலையை அடைவர்.

 · இனியவை கூறல்

     துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும், யார்மாட்டும்

     இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.— குறள் 94

     எல்லோரும் விரும்பும்படி இன் சொல் பேசுபவர்க்கு துன்பம் தரக்கூடிய வறுமை இல்லாமல் போகும்.

    · செய்நன்றி

             பயன்தூக்கார் செய்த உதவி நாயந்தூக்கின்

             நன்மை கடலின் பெரிது.  =-  குறள்-103

           எவ்வித பதிலுதவியையும் எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியை எண்ணிப்     பார்த்தால் அதன் நன்மை கடைலைவிடப் பெரியதாகும்.

 · நடுநிலைமை

           சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

     உட்கோட்டம் இன்மை பெறின். குறள்—119)

     ஒருவனது சொல்லில் குற்றம் இல்லாதிருத்தலே நடுவுநிலமையாகும். உள்ளம்   நடுவுநிலைமையில் இருக்குமானால் சொல்லில் குற்றம் இல்லாதநிலை    உண்டாகும்.

 · அடக்கமுடைமை

     கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

     அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

           கோபம் கொள்ளாமல் வாழும் வழியை அறிந்து, அடக்கமாக வாழ்பவனிடம் சென்று சேர்வதற்கு அறம் காத்துக்கிடக்கும்.

      இத்தனைப் பண்புகளையும் உள்ளடக்கியதுதான் ஒழுக்கம் என்னும் ஒரு சொல். அடேயப்பா ஒழுக்கமுடையவர்களாக இருக்க இத்தனை விசயங்கள் தேவை என்று மலைக்கவேண்டாம்.  ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. மிக எளிமையானவை. ஒவ்வொன்றையும் கடைப்பிடிக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியை உணரலாம். இலகுவானது. இன்பம் தரக்கூடியது.

 · ஏன் ஒழுக்கம் வேண்டும் ?

      பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

     தேரினும் அஃதே துணை. (132)

      ஒழுக்கத்தை வருந்தியும் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால், அறங்கள் அதாவது நல்ல செயல்களுக்கு, நற்சிந்தனைகளுக்கு ஒழுக்கமே சிறந்த துணையாக, காரணமாக இருக்கிறது.

         நற்சிந்தனை இருந்தால் நற்செயல்கள் இருக்கும். நற்செயல்கள் இருந்தால் தனிமனிதனும், குடும்பமும், சமுதாயமும் நலம் பெறும்; வளம் பெறும்; அந்த நாடும் மேன்மையுறும்; இந்த உலகும் உய்வடையும்; அமைதியுறும். ஆக, ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் இன்பம் அளிக்கக்கூடிய ஒரு மிகச்சிறந்த பண்பாகும். அதனை ஒவ்வொரு தனி மனிதனும் கடைப்பிடிக்க வேண்டும்.

இரா.சின்னதுரை

திருச்சி-620012.

9443144043.

(ஒழுக்கம் என்பது என்ன? அதை நாம் ஏன் பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் என்ன நன்மைகள் விளையும். அதன் மூலம் இந்த சமுதாயத்துக்கு என்ன பயன். என்பது குறித்து நண்பர் ஒருவர் கட்டுரை ஒன்று கேட்க அதற்காக எழுதப்பட்டது. 2015 - அவர் எதிர்பார்த்த கருத்துக்கள் இடம்பெறவில்லை என நண்பர் இந்தக் கட்டுரையை கண்டுகொள்ளவில்லை)